Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
'ஊவா மாகாண தமிழ்ப் பாடசாலைகளின் பெறுபேறு அடைவு மட்டங்களை அதிகரிப்பதற்காக எதிர்வரும் 2016ஆம் ஆண்டு, பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவு உதவிச் செயலாளர் வேலுசாமி கருணாகரன் தெரிவித்தார்.
'ஊவா மாகாணத்தின் அனைத்து தமிழ்ப் பாடசாலைகளுக்கும் ,ணையத்தள வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து பாடசாலைகளின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்வரும் காலங்களில் ,ணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுடன் மேற்கொண்ட மாகாண தமிழ்க் கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போதே, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ,ம்முடிவுகளை அடுத்த மாதம் முதல்; அமுல்படுத்தப்படுவதற்கு, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, மாகாண அமைச்சர் கண்டிப்பான பணிப்புரைகளை வழங்கியதாகவும் அவர் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 'மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டங்களை அதிகரிக்கும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
க.பொ.த. சாதாரண தரத்துக்கான பாடங்களைச் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவு செய்யவும் அதைத் தொடர்ந்து ஒன்பது பாடங்களுக்குமான பரீட்சைகளை நடத்தி, மாணவர்களின் கல்விப் பெறுபேறுகளை மதிப்பீடு செய்யவும் ஆலோசித்துள்ளோம்.
இதன்பின்னர் பெற்றோர், ஆசிரியர் சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், பயிற்சி செயலமர்வுகளும் நடத்தப்படும். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு பயிற்சி செயலமர்வில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளன.
அத்துடன், கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான தரமிக்க வளவாளர்களை எடுப்பித்து, அவர்கள் மூலமாக அப்பாடங்களை ,றுவட்டுக்களில் பதிவுசெய்து, அனைத்து பாடசாலைகளுக்கும் ,றுவட்டுக்கள் பகிர்ந்தளிக்கப்படும்.
மாதாந்த அடைவுமட்ட பரீட்சைகளை 9,10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த மாதம் ஆரம்பிப்பதுடன், படிப்படியாக 6, 7 மற்றும் 8 ஆகிய வகுப்புக்களுக்கும் ,ப்பரீட்சைகள் விஸ்தரிக்கப்படும்.
மாணவர்களின் பெறுபேற்று அடைவு மட்டத்தை சிறப்பாகக் கொண்டுச் செல்ல, மேலும் பாட ரீதியிலான ,ரண்டு கல்விப் பணிப்பாளர்கள் தமிழ்ப் பிரிவுக்கு நியமிக்கப்படுவர். அவர்களுக்கு, மாணவர்களினது பெறுபேற்று அடைவு மட்டத்தை அதிகரிக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டு பாடசாலைகளுக்கும் அனுப்பப்படுவர்.
க.பொ.த. உயர்தரம் இரண்டாம் வருட, இண்டாம் தவணையுடன் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, அவர்களுக்கும் பொதுப் பரீட்சைகள் நடத்தப்படும். அப்பரீட்சை மதிப்பீட்டின் பிரகாரம் பயிற்சி செயலமர்வுகள் மேற்கொள்ளப்படும்.
க.பொ.த. சாதாரண தரம் கணிதம், விஞ்ஞானம் ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்ய மாகாண மட்டத்தில், ,ரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரிய வளங்களை பெற்றுக்கொள்ள பத்திரிகை விளம்பரங்கள் ஊடாக தெரிவு செய்து, நேர்முகப் பரீட்சைகளையும் நடத்தி, தரமான ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவர். தெரிவுசெய்யப்படும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடசாலைகளில் சேவைகளில் ஈடுபடுத்தப்படுவர்.
உயிரியல் மற்றும் பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளை அபிவிருத்தி செய்ய, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தரம் 3 தொடக்கம் தரம் 5 வரையிலான மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி பெறுபேற்று அடைவு மட்டத்தை அதிகரிக்க இரு மாதங்களுக்கு ஒருமுறை, மாகாண கல்வி அமைச்சின் தமிழ்ப் பிரிவு, பரீட்சைகளை நடத்தி மாணவர்களின் கல்வி நிலையை மதிப்பீடு செய்யும்.
ஊவா மாகாணத்தின் தமிழ்ப் பாடசாலைகள் பலவும் பெருந்தோட்டங்களின் பெயரில் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டே ,ருந்து வருகின்றன. ,தனை நீக்கி, வரலாற்று ரீதியிலானதும், மரபு ரீதியிலானதுமான, தலைவர்களின் பெயர்களைச் சூடிய வகையில் பாடசாலைகளின் பெயர்களையும் பாடசாலை மண்டபங்களின் பெயர்களையும் மாற்றி அமைக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago