Sudharshini / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ
2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையால், தாம்; பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக தெரிவித்து நுவரெலியா, தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (16) 700ற்கும் மேற்பட்ட பாற்பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பால்மாவின் விலை குறைக்கப்பட்டதையடுத்து, கால்நடை வளர்ப்பாளர்களிடம் இருந்து சேகரிக்கும் பாலை கம்பனிகள் நிராகரிப்பதாகவும், அதனால் தமக்கு பெருமளவு நட்டம் ஏற்படுவதாகவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டத்தில் பாற்பண்ணையாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டகார்கள் பதாதைகளை ஏந்தியவாறும் பாலை வீதியில் கொட்டியும் தமது எதிர்ப்பை வெளிகாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.



14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026