2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

பொகவந்தலாவையில் ஐஸ்: இருவர் கைது

Editorial   / 2025 செப்டெம்பர் 08 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தலா 170 மில்லி கிராம் ஐஸ் எனும் போதைப் பொருள் கை பற்ற பட்டுள்ளது.

அரச புலனாய்வு பிரிவினர் வழங்கிய  தகவலுக்கு அமைய  வீதி தடைகளை அமைத்து மேற்கொண்ட சோதனையின் போது முச்சக்கர வண்டியில் சென்ற சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தலா 170 மில்லி கிராம் ஐஸ் எனும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்விருவரும் பொகவந்தலாவ சிரிபுர,செப்பல்டன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என   நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

செ.தி.பெருமாள் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X