Editorial / 2020 ஜூன் 22 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்
ஹட்டன் நகரிலுள்ள பசளை விற்பனை நிலையமொன்று, இன்று (22) அதிகாலை உடைக்கப்பட்டு, அங்குள்ள 4 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.
கடையைத் திறப்பதற்காக, கடையின் உரிமையாளர் காலை வந்தபோதே, கடையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இதையடுத்தே, இது தொடர்பாக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவம், அதே வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ள நிலையில், அதை ஆதாரமாக வைத்து, கொள்ளையர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
46 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
5 hours ago