Kogilavani / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு, பணிப் பெண் வேலைக்காக செல்லும் பெண்கள், அந்நாடுகளிலுள்ள மோசடி பேர்வழிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என பிரிடோ நிறுவனம் கோரியுள்ளது.
இத்தகைய மோசடியாளர்களை நம்பி ஏமாறும் பெண்கள் மற்றும் ஆண்கள், பல நெருக்கடிகளை அங்கு எதிர்கொள்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்றவர்களின் நிலைமையை அறிவதற்காக பிரிடோ நிறுவன அதிகாரிகள் சிலர் லெபனான், ஜோர்தான் போன்ற நாடுகளுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டனர். அங்கு அவர்கள் அவதானித்த பல பாரதூரமான விடயங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் கலந்துரையாடினர். இவ்விழிப்புணர்வு கூட்டம் திங்கட்கிழமை(11), ஹட்டனில் நடைபெற்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்கள்,
'லெபனான், ஜோர்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் சிலர், அந்நாடுகளிலுள்ள உள்ளூர்வாசிகளோடு அல்லது குடும்பங்களோடு தொடர்புகளை ஏற்படுத்தியப் பின்னர், பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் ஆண்களும் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்களில் அநேகமானவர்கள் இலங்கையர்கள்.
இத்தகைய மோசடியாளர்கள், வீட்டுப் பணிப் பெண்களாக வேலைசெய்யும் பெண்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களுக்கு அதிக சம்பளத்தோடு வேறு வீடுகளில் வேலை பெற்றுத்தருவதாக அல்லது வேறுவிதமான பொய் வாக்குறுதிகளை வழங்கி, அப்பெண்களை வேலைசெய்யும் வீடுகளில் இருந்து திருட்டுத்தனமாக வெளியேறச் செய்கின்றார்கள்.
அப்பெண்களை வேறு வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் மோசடியாளர்கள், அங்கு அவர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்த வீட்டின் உரிமையாளர்களிடமிருந்து இருந்து கமிசனைப் பெறுகின்றனர். சில நேரங்களில் அவர்களை வாடகை வீடுகளில் தங்கவைத்து மாறிமாறி வௌ;வேறு வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி அதிலும் கமிசனை பெறுகின்றனர்.
இவர்களை நம்பி வீடுகளில் இருந்து வெளியேறுகின்றவர்கள் அந்நாடுகளில் சட்டவிரோதமாக பணியாற்றும் பணியாளர்களாக முத்திரை குத்தப்படுகின்றனர். இவர்கள் அந்நாடுகளிலுள்ள பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின் சிறைவாசத்தை எதிர்கொள்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான பெண்கள் வன்புணர்வுக்;கும் உள்ளாக்கப்படுவதுடன் விபசாரம் செய்யவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சிலர் வேறு ஆடவருடன் தகாத உறவை ஏற்படுத்தி அதற்கூடாக கருத்தரிப்பதுடன் கைவிடப்படவும் செய்கின்றனர்.
சிலவேளைகளில் ஒரு நாட்டிலிருந்து மற்றுமொரு நாட்டுக்கு ஆட்கடத்தல் செய்யப்படுகிறார்கள்.
இலங்கையிலிருந்து வீட்டுப் பணி பெண் வேலைக்காக செல்லும் பெண்கள் மற்றும் ஆண்கள் இத்தகைய மோசடிக்காரர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கிறவர்கள் ஒருபோதும் இப்படியான மோசடியாளர்களை நம்பி வேலைசெய்யும் வீடுகளில் இருந்து வெளியேறக் கூடாது.
தாங்கள் வேலைசெய்யும் வீடுகளில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்துக்கே செல்லவேண்டும். ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள தங்கள் உறவினருக்கு தொடர்புகொண்டு, எக்காரணம் கொண்டும் இவ்வாறான மோசடி நபர்களை நம்பி தங்கள் பணிபுரியும் வீடுகளில் இருந்து வெளியேறக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். தங்கள் குடும்ப நலன் கருதி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் வெளிநாடு செல்லும் பெண்களை பாதுகாப்பதற்கு எம்;மாலான உதவிகளை செய்வது எமது கடமையாகும்' என தெரிவித்தனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago