Janu / 2026 மார்ச் 23 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை - பண்டாரவளை வீதியின் எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோவ ரஜமஹா விகாரைக்கு அருகில் வைத்து பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த நால்வர் காயமடைந்து தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
9 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
47 minute ago