Princiya Dixci / 2017 மே 03 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பதுளை கல்வி வலயமட்ட தமிழ் மொழித்தின போட்டிகள், எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை வரை இடம்பெறவுள்ளன.
5ஆம் திகதி வௌ்ளிக்கிழமை - சகல எழுத்தாக்கப்போட்டிகளும், சிங்கள மாணவர்களுக்கான விசேட போட்டிகளும் நடைபெறவுள்ளதுடன், சனிக்கிழமையன்று - பேச்சு, பாவோதல், வாசிப்பு, விவாதம், வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல் மற்றும் முஸ்லிம் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கான போட்டிகளும், இறுதிநாளன்று - இசை, நடனம், மேடை நாடகம் மற்றும் தமிழறிவு வினாவிடை ஆகிய போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இப்போட்டிகளுக்கான நடுவர்கள் பிற வலயங்கள் மற்றும் மாகாணங்களிலிருந்து வரவழைக்கப்படுவதுடன், எந்தவொரு மாணவனும் பாதிப்படையாத வகையில், நம்பகத் தன்மையுடன், இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளதாகவும் தமிழ்த் தாய்க்கு மரியாதை செலுத்துமுகமாக விசேட ஆரம்ப நிகழ்வும் நடைபெறவுள்ளதாகவும், பதுளைக் கல்வி வலயப் பிரதி பணிப்பாளம் வே. கருணாகரன் தெரிவித்தார்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026