Kogilavani / 2017 ஏப்ரல் 28 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனிவீட்டு திட்டத்தின் தொடர்ச்சியாக, 216 தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை, பதுளை மாவட்டத்தில் அம்பிட்டிகந்த, பூணாகலை ஆகிய தோட்டங்களில் நடைபெற்றது.
அம்பிட்டிகந்த தோட்டத்தில் 157 வீடுகளும் பூணாகலை தோட்டத்தில் 59 வீடுகளுக்குமான அடிக்கற்கள் இதன்போது நாட்டப்பட்டன.
இத்தனி வீடுகள் 7 பேர்ச்சஸ் காணியில் 550 சதுர அடியில் 10 இலட்சம் செலவில் நிர்மாணிக்கப்பட்டு, உறுதிப்பத்திரத்துடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளன.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில், அமைச்சர்களான பா.திகாம்பரம், ஹரின் பெர்னாண்டோ பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.அரவிந்குமார், வடிவேல் சுரேஷ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் அமைப்பாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026