2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பதுளை விபத்தில் ஒருவர் பலி: நால்வர் காயம்

Editorial   / 2024 மே 10 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான  பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X