2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பம்பரக்கலை தோட்டத்தில் மூன்று வீடுகள் தீக்கிரை

Kogilavani   / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பம்பரக்கலை தோட்டம் இலக்கம் 7ஆம் பிரிவிலுள்ள குடியிருப்புத் தொகுதியில், இன்று (1) மாலை ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று வீடுகள்  பாதிக்கப்பட்டுள்ளன என்று, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஒரு வீடு பகுதியளவிலும் இரண்டு வீடுகள் முற்றாகவும் தீக்கிரையாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுவர்கள் கட்டலில் அமர்ந்தவாறு பீடி புகைத்துள்ளனர் என்றும் இதன்போது பரவிய தீ மெத்தையில் விழுந்த நிலையில் அது பாரிய தீயாக பரவியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேற்படி இரு சிறுவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் முற்றாக பாதிக்கப்பட்ட  2 வீடுகளைச் சேர்ந்த  12 பேரை பாதுகப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை, இப்பகுதிக்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரி ஊடாக தோட்ட நிர்வாகம் மற்றும் நுவரெலியா மாநகர சபை மேற்கொள்வதற்கு,  மாநகர சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி  சிவன்ஜோதி யோகராஜா மேற்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X