2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பயணிகளின் நலன் கருதி விசேட பஸ் சேவையை ஏற்படுத்தவும்

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டை முன்னிட்டு மலையக பகுதிகளுக்கு  விசேட பஸ் மற்றும் ரயிலை சேவையிலீடுப்படுத்துமாறு அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் ரயில் சேவை ஆகியவற்றுக்கு அவசரக் கடிதமொன்றை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் அனுப்பி வைத்துள்ளார்.

ஹட்டன், தலவாக்கலை, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, மத்துகமை, எட்டியாந்தோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு   11, 12ஆம் முதல் விசேட பஸ்கள் மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் கூறியுள்ள அவர்,

மலையகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள், கொழும்பில் தொழில் செய்து வருவதால்,  அவர்கள்  சிரமமின்றி வீடு செல்வதற்கு போதிய பஸ் சேவைகளையும் ஈடுபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்குமாறு அமைச்சரை கோரியுள்ளார்.

இதேவேளை அவர்கள், 17,18ஆம் திகதிகளில் மீண்டும் தமது வேலைத் தளங்களுக்கு திரும்ப வேண்டியிருப்பதால், அதனையும் கருத்தில் கொள்ளுமாறும் பஸ் சேவைகளை குறிப்பிட்ட தினங்களில் ஈடுபடுத்தத் தவறும்போது ஒரு சில தனியார் பஸ் உரிமையாளர்கள் வரையறை இல்லாத தொகையை பயணிகளிடம் அறவிட்டு, அவர்களை சிரமத்திற்குள்ளாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இவற்றைத் தவிர்த்துக்கொள்ள போதிய பஸ்களை சேவைகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரை, தலைவர் முத்து சிவலிங்கம் கேட்டுள்ளார்.                                                                     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .