Gavitha / 2021 மார்ச் 01 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
கொரோனா வைரஸ் காரணமாக, பல சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்ட கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை, இன்று (01) ஆரம்பமானது.
இதனையொட்டி நேற்று (28) பரீட்சை நிலையங்கள் அனைத்துக்கும் தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டன.
இந்நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள மாணவர்கள், கோவில்கள், வீடுகளில் இறை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பெற்றோரும், பொறுப்பாளர்களும் பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 25 ஆயிரத்து 98 மாணவர்கள் தோற்றுகின்றனர். 179 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026