2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

பல நாள் திருடன் அகப்பட்டான்

மொஹொமட் ஆஸிக்   / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த நபரை, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், நேற்று (14) கைது செய்தனர்.

அத்துடன், இவரால் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படும் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பல வீடுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்டு வருவதாக, பொலிஸாருக்கு பல வீட்டு உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருடிய பொருள்களுக்குள், தொலைக்காட்சி, கணினி பாகங்கள், சிசிடீவி கமெரா தொகுதி, மின்சார உபகரணங்கள், இரும்புக் கம்பிகள், கண்ணாடிப் பொருள்கள், கேஸ் பீப்பாய்கள் உள்ளிட்ட பல பொருள்கள் அடங்குகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .