Sudharshini / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
வெலிமடை, ஹப்புத்தளை வீதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கெப்பிட்டிப்பொல டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸின் நடத்துநர் ஒருவர், தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் வெலிமடை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (09) கைதுசெய்துள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், வெலிமடைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, பொரலந்த எனும் இடத்தில் வைத்து மேற்படி நான்கு மாணவர்களையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த நடத்துநர், பொரலந்த கிராமிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேற்படி பஸ் நடத்துனர் மீது எதற்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையிலே, 4 மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்வம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
30 minute ago