2026 ஜனவரி 21, புதன்கிழமை

பாடசாலை சேவையில் ஈடுபடும் வானிலிருந்து விழுந்து சிறுவன் பலி

Kogilavani   / 2021 மார்ச் 25 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமனசிறி குணத்திலக்க

பாடசாலை சேவையில் ஈடுபடும் வானொன்றின் கதவு திடீரென திறப்பட்டதால், வானுக்குள் பயணித்த ஐந்து வயது சிறுவன், வீதியில் விழுந்து பரதாபகரமாக உயிரிழந்தச் சம்பவம், வெல்லவாய-எல்ல வீதி, ஹுனுகெட்டிய சந்தியில், இன்று (25) இடம்பெற்றுள்ளது.

வெல்லவாய சாந்த மேரி தேவாலயத்தில் நடத்தப்பட்டு வரும் முன்பள்ளியில் கல்வி கற்றுவந்த வணிகசூரிய முதியன்சலாகே அனுஹஸ் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

முன்பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு மேற்படி வான் பயணித்துள்ள நிலையில், மேற்படிச் சந்தியில் வைத்து வானின் கதவு திடீரென திறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கதவோரம் இருந்த சிறுவன் வீதிக்கு தூக்கியெறியப்பட்டுள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வானின் சாரதியை வெல்லவாய பொலிஸார் கைதுசெய்துள்ளடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X