2025 மே 19, திங்கட்கிழமை

பாடசாலை போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

பாடசாலை சேவைகளில் ஈடுபடும் தனியார் பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ஹட்டன் இ.போ.ச டிப்போ மூலம் பல நாட்களாக எரிபொருள் விநியோகிக்கப்படாமை காரணமாக,  பாடசாலை சேவைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பிரதேச பாடசாலை சேவை வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

டிப்போ மூலம் தமது வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாமை காரணமாக, QR முறை மூலம் வாரத்துக்கு ஒரு தடவையே எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதாகவும் இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் எரிபொருளால் 2 நாட்களுக்கு மாத்திரமே சேவையில் ஈடுபடு முடிவதாகவும் பாடசாலை போக்குவரத்து சேவை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வாகனங்களை லீசிங் முறையில் கொள்வனவு செய்துள்ளதால் மாதாந்த லீசிங் கட்டணங்களை குறித்த போக்குவரத்து சேவையால் கிடைக்கும் வருமானத்தை வைத்தே செலுத்துவதாகவும் தற்போதைய நிலையில், அந்த வருமானத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹட்டன் டிப்போவால் பாடசாலை போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படாமை குறித்து ஹட்டன் டிப்போவின் முகாமையாளரிடம் வினவியபோது, தமது டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கு தேவையான எரிபொருள், கொட்டகலை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என்றும் இதனால் தனியார்போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X