Editorial / 2024 மார்ச் 22 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளிலும் மலையகத்தில் இயங்கும் நகர்ப்புற பாடசாலைகளிலும் ஆளணி பற்றாக்குறை வள பற்றாக்குறை தொடர்பில் பிரச்சனைகள் நிலவுகின்றது. இவற்றை கட்டம் கட்டமாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியில் நீண்ட காலமாக நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநருடன் விசேட கலந்துரையாடல் நடைபெற்றதோடு மேற்குறிப்பிட்ட குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்ய மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் மத்துகம கல்வி வலையத்துக்கு உட்பட்ட தமிழ் பாடசாலை ஒன்றில் நீண்ட காலமாக இழுப்பறி நிலையில் இருந்து வந்த பாடசாலைக்கு புதிய கட்டிடம் நிர்மானிப்பதற்கு காணி ஒதுக்கீடு தொடர்பில் மேல் மாகாண ஆளுநரின் பிரதான செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு அமைய உடனடியாக காணி ஒதுக்கீடு செய்வதற்கும் புதிய கட்டிடம் நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களும் இரு வேறு மாகாணங்களுக்கு உரித்தானது என்ற போதிலும் பிரச்சனையில் மாறுபாடு இல்லை.ஊவா மாகாணத்திலும் இத்தகைய சூழ்நிலை நிலவுகின்றது அவற்றை நிவர்த்தி செய்யவும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.
அருகில் உள்ள பாடசாலைகளில் குறைபாடுகள் நிலவுவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் அசௌகரியமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவதோடு தொலைவிலுள்ள பாடசாலைக்கு சென்று தங்களுடைய கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.மலையக சமூகத்தின் வளர்ச்சி பாதை கல்வியிலேயே தங்கியுள்ளது மலையக சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் . ஆகவே, பெருந்தோட்ட பாடசாலைகள் நிலவும் குறைபாடுகளை கட்டம் கட்டமாக தீர்த்து வைக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
3 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
1 hours ago
2 hours ago