Gavitha / 2021 ஜனவரி 03 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
மத்திய மாகாணத்தில், நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட சில பாடசாலைகளில், உதவி கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வளவாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் தொடர்ச்சியாக நிலவி வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றும்
குறிப்பாக கல்வி பொதுத்தராதர சாதாரண தர வகுப்புக்கான வணிகக்கல்வியும் கணக்கீடும் பாடத்துக்கும் உயர்தர பிரிவின் வணிகக்கல்வி, பொருளியல், கணக்கீடு, வணிக புள்ளிவிபரவியல் போன்றப் பாடங்களுக்கான வெற்றிடங்கள் தொடர்ந்தும் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேடமாக வணிகக்கல்வி பாட அபிவிருத்தி தொடர்பில் எந்த ஒரு தரப்பினரும் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும் குறித்த பாடத்துக்கான பெறுபேறுகளை அதிகரிப்பதற்கான எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள் உட்பட மாணவர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, மத்திய மாகாண கல்வி அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago