Editorial / 2017 டிசெம்பர் 01 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொகவந்தலாவ, நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உடனடி நிவாரணங்களை வழங்கியுள்ளது.
இ.தொ.கா பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்டுள்ளன.
பொகவந்தலாவ, நோர்வூட் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை இன்று காலை(01) நேரில் சென்று பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழுவினர் சேத விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
உணவு, உலர் உணவு, உடுதுணி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago