Editorial / 2018 ஒக்டோபர் 05 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இரத்தினபுரி பாம்கார்டன் தோட்ட இளைஞர்கள் பலருக்கு, பேஸ்புக்கில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி பொலிஸில்,நேற்று முன்தினம் இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தோட்டத்தில் கசிப்பு உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைக்கு எதிராகக் குரல்கொடுத்து வந்த விஜேரட்னம் என்ற இளைஞர் கொலைசெய்யப்பட்டச் சம்பவத்தையடுத்து, அவ்விளைஞனின் கொலைக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்யுமாறு கோரி, பிரதேச இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்திய இளைஞர்களுக்கே, பேஸ்புக்கில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கொலைக்கு காரணமானவர்களே, அச்சுறுத்தலை விடுத்து வருவதாகத் தெரிவிக்கும் இளைஞர்கள், இந்தத் தோட்டத்தில் வசிப்பதற்கு அச்சமாக இருப்பதாகவும் எனவே, பொலிஸாரும் மலையக அரசியல் தலைவர்களும் தமக்கு, உரியப் பாதுகாப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026