Freelancer / 2024 ஒக்டோபர் 25 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் சதீஸ்
ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகாவித்தியாலயத்தின் முன்பாக பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த பாடசாலையின் அதிபர் பாலியல் சேட்டையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் பாடசாலையில் கல்வி பயிலுகின்ற மாணவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது .
இந்த அதிபர் குறித்து பலமுறை ஹட்டன் கல்வி வலையத்திற்கு பெற்றோர்கள் பல முறைப்பாடுகளை முன்வைத்த போதும், ஹட்டன் வலைய கல்வி பணிமனை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்றைய தினம் பெற்றோர்கள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஹட்டன் வலைய கல்வி பணிமனையின் பணிப்பாளர் மற்றும் உதவி கல்வி பணிப்பாளர் ஆகிய குழுவொன்று சம்பவம் இடம் பெற்ற பாடசாலைக்கு விரைந்தனர்.
பெற்றோர்களின் முறைப்பாற்றிற்கு அமைய இன்றைய தினம் டிக்கோயா என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலத்திற்கு வருகை தந்த ஹட்டன் வலைய கல்வி பணிப்பாளர் ஆர்.விஜேந்திரன் தெரிவிக்கையில்,
பெற்றோர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த பாடசாலையின் அதிபர் இராதகிருஷணன் என்பவரை ஹட்டன் வலைய கல்வி பணிமனை அழைத்து விசாரனைகளை மேற்கொள்வதோடு இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாகாண கல்வி தினைக்களத்தின் செயலாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலைய கல்வி பணிமனை பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த ஹட்டன் பொலிஸார் தமக்கு முறைபாடு கிடைத்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக தாம் விசாரனைகளை மேற்கொள்வதாக ஹட்டன் பொலிஸார் அறிவித்த பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர் . R
51 minute ago
58 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
3 hours ago
05 Nov 2025