2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பிதுருதாலகல மலையில் காட்டுத் தீ

Kogilavani   / 2021 மார்ச் 02 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பிதுருதாலகல மலையில், நேற்று  மாலை ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக சுமார் ஓர் ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக, நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தீயைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியாத காரணத்தால், விமானப் படையினரின் உதவி கோரப்பட்டதாகவும் ஹெலிகொப்டர் மூலம் நீர்ப்பாய்ச்சியே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

காட்டுக்கு விஷமிகள் தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார் தீ மூட்டக்கூடியப் பொருட்களுன் காட்டுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X