Kogilavani / 2021 மார்ச் 17 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, டி.சந்ரு
நுவரெலியா பிதுருதாலகால வனத்தை, தீ விபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் (குசைந உயடிந) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அலுவலகம், மரக்கூட்டுத்தாபனம் மற்றும் வனப்பாதுகாப்பு காரியாலயம், இராணுவம், விசேட அதிரடிப்படையினர், அரச காரியாலய அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் இணைந்து, இத்திட்டத்தை நேற்று முன்தினம் (17) முன்னெடுத்தனர்.
நீர்வளம் மற்றும் அரியவகை மரங்களைக் கொண்ட குறித்த வனப்பகுதிக்கு, இனந்தெரியாதோரால் சுமார் 20 தடவைகளுக்கு மேல் தீ வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வனத்திலுள்ள அரிய வகை மூலிகைகள், மரங்கள் அழிந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனைத் தடுத்து வனத்தையும் மூலிகைகளையும் பாதுகாக்கும் வகையிலேயே தீயை கட்டுப்படுத்தி இடைவெளியை ஏற்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அன்ர்த்த முகாமைத்துவ உதவி அத்தியட்சகர் ரஞ்சித் அலககோன் தெரிவித்தார்.



21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026