Kogilavani / 2021 மார்ச் 29 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவானிஸ்ரீ
இலங்கையின் முதலாவது நகர பல்கலைக்கழகம் (ஊவைல ருniஎநசளவைல ) கேகாலை ரம்புக்கன பின்னவலயில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத்தினால் சப்ரகமுவ மாகாண நிதி ஒதுக்கீட்டில் 1,240 இலட்சம் ரூபாய் செலவில் ஹோட்டல் பாடசாலைக்கென அமைக்கப்பட்ட நான்கு மாடி கட்;டடத்தொகுதியை மய்யமாகக் கொண்டு நகர பல்கலைக்கழத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்ந்துப் பார்ப்பதற்காக, இராஜாங்க அமைச்சர்களான சீதா ஹரம்பேபொல, கனக ஹேரத் மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர், மேற்படிக் கட்டடத்தை நேற்று முன்தினம் (27) நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில், சுற்றுலாத்துறை, விவசாயத்துறை, மொழிகள், கால்நடை, ஆடை உள்ளிட்ட பல்வேறு துறைகளை மைய்யமாகக் கொண்டு கற்கைநெறிகளைத் தொடர முடியும்.
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படாத மாணவர்களுக்கு இதன்மூலம் வாய்ப்புகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago