2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பிரதேச செயலகத்தின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Kogilavani   / 2021 மார்ச் 05 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தின் புதிய பிரதேச செயலகமாக கல்தோட்டை பிரதேச செயலகம், நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக இரத்தினபுரி மாவட்ட பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் மாலினி லொகுபோதாகம தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு முதல் உபகாரியாலயமாக இயங்கி வந்த இப்பிரிவு, 94 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட முற்றிலும் கிராமிய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.

4,108 குடும்பங்களைச் சேர்ந்த 14,734 பேர் வசிக்கின்ற இப்பகுதியில், 12 கிராம சேவகர்  பிரிவுகள் அமைந்துள்ளன.

மேற்படி மக்கள் இதுவரை பலாங்கொடை பிரதேச செயலகத்துக்குச் சென்றே தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனர்.

சுமார் 30 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பலாங்கொடை பிரதேச செயலகத்துக்குச் சென்று வருவதில் பாரிய இடர்களை மேற்கொண்டமையைக் கருத்திற்கொண்டே மேற்படி பிரதேச செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

பிரதேச செயலகத்துக்கான புதிய நிர்வாகக் கட்டடம் மற்றுமு; ஆளணியினர் வழங்கப்படுவர் என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X