2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

’பிரிந்து சென்றவர்கள் வரலாம்’

ஆ.ரமேஸ்   / 2020 ஜூன் 22 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள், மீண்டும் இணைந்துகொள்ள வருவார்களாயின், அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பதாக, நுவரெலியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே. பியதாச தெரிவித்தார்.

நேற்று (21), ஹட்டனில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

1,000 ரூபாய் சம்பளம் விடயம் உள்ளிட்ட, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பல பிரச்சினைகள் தொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சி கவனம் செலுத்தி வந்தமை, மலையக மக்கள் அறிந்த விடயமே என்று தெரிவித்த அவர், 1,000 ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்கும் நிலைப்பாட்டில் இருந்து தாங்கள் மாறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், நாட்டிலுள்ள தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் ஐ.தே.க மீது கொண்டிருந்த பற்று காரணமாகவே தொடர்ந்து ஆதரவை வழங்கி வந்தனர் என்றும் அந்த ஆதரவு இன்னும் குறையவில்லை என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .