Gavitha / 2021 மார்ச் 11 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசனத் திட்டமான மினிப்பே, நீர்பாசனத் திட்டம் மூலம், விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, புதிய விவசாய உபகரணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் அன்றாட நடவடிக்கைகளை எளிதாகவும் திறமையாகவும் செய்ய, அரசாங்கம் எடுத்த திட்டத்தின் கீழ், இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இது, கண்டி மாவட்ட விவசாயக் குழுவால் மேற்பார்வையிடப்படுகிறது. அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய விவசாயக் கருவிகளை ஆய்வு செய்வதற்காக, கண்டி மாவட்ட செயலாளர் திரு.சந்தன தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள், சமீபத்தில், மினிப்பே பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
தொழில்நுட்ப உபகரணங்களை வழங்குவதில் விவசாயிகளின் வசதியைக் கருத்தில் கொள்ளுமாறு, அதிகாரிகளுக்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் விவசாயிகளின் நெல் நிலங்களின் நிலப்பரப்புக்கு ஏற்ப, தொழில்நுட்ப உபகரணங்களின் அளவை மாற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025