Janu / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தர் சிலைகளில் இருந்த, தங்க முலாம் பூசப்பட்ட ஊர்ணாக்களை திருடிய இரண்டு சந்தேகநபர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) அன்று நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் நாவலப்பிட்டிய - கெட்டபுலவ விஹாரைலுள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்த ஊர்ணாவை திருடும் காணொளி குறித்த விஹாரையில் பொருத்தப்பட்ட பாதுக்ப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, ஊர்ணாவை திருடிக்கொண்டு முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து , பெருமளவிலான தங்கத்தையும், உருக்கப்பட்ட தங்கக் கட்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
திருடப்படும் தங்கம் குருநாகல் மற்றும் பிலிமத்தலாவை பகுதிகளில் தங்க வியாபாரம் செய்யும் நகை விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு உருக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
புத்தர் சிலையின் நெற்றியில் காணப்படும் சிறு வளைவு அல்லது புள்ளி ஊர்ணா (Urna) என்று அழைக்கப்படும். இது புருவங்களுக்கு இடையில் அமைந்திருக்கும்.

3 minute ago
9 minute ago
20 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
20 minute ago
21 minute ago