2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

புலமைப்பரிசில் வழங்கல்

Kogilavani   / 2021 மார்ச் 02 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

மத்திய மாகாண தமிழ்மொழிமூல பாடசாலைகளில், கல்வி பொதுத்தர உயர்தரத்தில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட சுமார் 35 மாணவர்களுக்கு, சர்வதேச மருத்துவநல அமைப்பினூடாக, 'நடராஜா அறக்கட்டளை' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, மஸ்கெலியாவில் நடைபெற்றது.

மேற்படி அமைப்பினூடாக, இரண்டு வருடங்களுக்கு, மாதாந்தம் புலமைப்பரிசில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், மஸ்கெலியா கோட்டம் -3 உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.நடராஜா, சர்வதேச மருத்துவ நல அமைப்பின் மஸ்கெலியா கிளை பணிப்பாளர் கந்தையா விக்னேஸ்வரன், செயலாளர் எஸ்.யோகேந்திரன், புலமைப்பரிசுலுக்கானப் பொறுப்பாளர் கே. புண்ணியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X