Kogilavani / 2021 மார்ச் 24 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, எஸ்.கணேசன்
கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அருகிலுள்ளள மின் உற்பத்தி நிலையத்தில், மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய ரக பெக்கோ இயந்திரமொன்று குடைசாய்ந்ததில் அதன் சாரதியான 22 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பதுளை ஹாலிஎல உடுவர பகுதியைச் சேர்ந்த சந்தருவான் மதுசங்க யாப்பா (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (24) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொல்பிட்டிய பகுதியிலுள்ள மின்சார உற்பத்தி நிலைய புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளை, பெக்கோ இயந்திரம் மண்ணில் புதையுண்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இயந்திரம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போது சாரதி பாய்ந்துள்ளார் என்றும் அவர் பாய்ந்த பக்கத்திலேயே இயந்திரம் குடை சாய்ந்ததில் அதில் அகப்பட்டு குறித்த இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக கினிகத்தேனை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026