Editorial / 2024 மே 16 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் வேன் மற்றும் நான்கு இளைஞர்களை கண்டி, அலதெனிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொதுப் தரப் பரீட்சையின் இறுதி வினாத்தாளைப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு புதன்கிழமை (15) சென்று கொண்டிருந்த வேளையில் யதிஹலகல சந்தியில் வைத்து கடத்த முயன்றுள்ளனர்.
அப்போது, அவருடன் இருந்த மேலும் இரு மாணவர்கள் அதைத் தடுக்க முயன்றனர், ஆனால் அவர்கள் அவர்களைத் தள்ளிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்றனர். இதுதொடர்பில் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அவ்விரு மாணவர்களும் உடனடியாக முறையிட்டனர்.
அழைப்பை பெற்றுக்கொண்ட அலதெனியா பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வேனை துரத்திச் சென்று சந்தேக நபர்களை கைது செய்தததுடன், மாணவியை கடத்திச் சென்ற வேனையும் கைப்பற்றினர்.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago