Kogilavani / 2021 மார்ச் 29 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மலையகப் பெண்கள் முதுகெலும்பாக உள்ளனர் என்று தெரிவித்த பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான், அத்தகையப் பெண்களுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் குரல் கொடுக்கும் என்றார்.
ஆண்களை போன்று பெண்களுக்கும் உலகில் முதன்;முறையாக சம சம்பளத்தை வாங்கிக்கொடுத்தவர் சௌமியமூர்த்தி தொண்டமான் என்றும் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர வழியில், தொடர்ந்து பெண்களுக்காக இ.தொ.கா குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின விழா, பதுளையில் நேற்று முன்தினம் (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட பதுளையிலுள்ள இ.தொ.காவின் முக்கியஸ்தர்களும் மகளிர் அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய செந்தில் தொண்டமான் மேலும் கூறியதாவது,
நாட்டில் இருக்கும் பெண்களில் அதிகமாக மலையகப் பெண்கள்தான வேலைக்குச் செல்கின்றனர் என்றும் இவர்கள் தங்களது குடும்பத்துக்கு மாத்திரமல்ல நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முதுகெலும்பாகவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
ஒரு தோட்டத்தில் 10 பெண்கள் இருந்தால் அவர்களில் 7 பேர் வேலை செய்பவர்களாக உள்ளனர் என்றும் ஏனைய சமூகங்களில் அவ்வாறு இல்லை என்றும் மலையகப் பெண்கள்தான் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago