2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

‘பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்ற சட்ட ஆலோசனை’

ஆ.ரமேஸ்   / 2020 ஜூன் 04 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட  தொழிலாளர்களுக்கு  முறையான தொழில் பாதுகாப்புகள் வழங்க மறுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல, சட்ட ஆலோசனை பரிசிலிக்கப்படுவதாக    

தொழிலாளர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக இயக்குநர் அழகமுத்து நந்தகுமார், இன்று (04) அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக தொழிலாளர் சம்மேளத்தின் ஊடாக, தொழிலாளர் தொழில் உரிமை சட்டம் 1C155 /1981 என்ற சரத்தில், தொழில் வழங்குவோர், தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக உறுதிப்படுத்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மலையக பெருந்தோட்டத் துறையை முகாமைத்துவம் செய்து வரும் கம்பனிகளும் தோட்ட நிர்வாகங்களும், இந்தச் சட்டத்தை மீறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் தொழில் பாதுகாப்பு விடயங்களை, தொழில் வழங்குனர்கள் மீறும் சந்தர்ப்பங்களில், இது சம்பந்தமாக தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இது தொடர்பாக தொழிலாளர் தேசிய சங்கம் ஆராய்ந்து  வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழில் பாதுகாப்பு சட்டவிதிகளை நடைமுறைப்படுத்தாது,  எதேச்சியகரமாக செயற்படும் பெருந்தோட்ட தொழில் வழங்குனர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக, சங்கம் பரிசீலித்து வருவதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .