2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பெருந்தோட்டக் கம்பனிக்கு உதவி தொழில் ஆணையாளர் கடிதம்

Kogilavani   / 2021 மார்ச் 16 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

பெருந்தோட்டங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்டத் தரப்பினருக்கு, நுவரெலியா பிரதித் தொழில் ஆணையாளர் பமுனேந்திர, கடிதம் மூலம் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று,  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர், இராகலை மாகுடுகலை பெருந்தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட தோட்டங்களில், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருப்பதுத் தொடர்பாக மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற புகாரையடுத்து இது தொடர்பாக தான் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டிருந்ததாக தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில், உதவி தொழில் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்ததாகவும் கூறினார்.

அதனடிப்படையில் நுவரெலியா மாவட்ட உதவி தொழில் ஆணையாளர், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை கடமையிலிருந்து வெளியேற்றுமாறு, குறித்த பெருந்தோட்ட கம்பனிக்கு கடிதம் மூலம் அறிவுறத்தியுள்ளார் என்றார்.

அத்துடன், சமாதானமான ஒரு சூழ்நிலையில் தொழிலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி சுயமாக தொழில்செய்வதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்குமாறும் உதவிதொழில் ஆணையாளர், கம்பனிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தக் கடிதம் கம்பனிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
எனவே தொழில் ஆணையாளரின் யோசனையின் அடிப்படையில் அவர்களை வெளியேற்றி தோட்ட நிர்வாகம் நிர்வாகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராதாகிருஷ்ணன் எம்.பி கோரியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X