Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2020 நவம்பர் 27 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எம்.கிருஸ்ணா
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொது சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனார்.
கொட்டியாகலை கீழ்பிரிவு, டிக்கோயா டிலரி தோட்டம், நோர்வூட் வெஞ்சர், செல்வகந்தை, பொகவான, மோரா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 52,32,21,26 வயதுடையவர்களுக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களை, கொரோனா சிகிச்சை முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் கொழும்பு புறக்கோட்டை, புளுமென்டல், பம்பலப்பிட்டி போன்ற பகுதிகளிலிருந்து, கடந்த 17ஆம் திகதி தமது வீடுகளுக்கு வருகை தந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வருகை தந்தவர்களில் எழுமாறாக 46 பேரிடம் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலேயே, அறுவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்படிப் பகுதியிலுள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டாம் என ஹட்டன் வலய கல்விப் பணிப்பாளர் பி. ஸ்ரீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago