2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பொகவந்தலாவையில் மேலும் நால்வர் சிக்கினர்

Gavitha   / 2020 டிசெம்பர் 06 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

பொகவந்தலாவயில், மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என, பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று (05) இரவு வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவிலேயே, நான்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொகவந்தலாவையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம், ஆரியபுர பகுதியில், 31, 05 வயது மற்றும் 4 மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில், 40 வயதுடைய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இனங்காணப்படட 31 வயதுடைய பெண், ஹட்டன் கல்வி வலையத்துக்குட்பட்ட பாடசாலையான்றில் ஆசிரியராக கடமையாற்றுவதாகவும் இவர் கடந்த வாரம், டயகம பகுதியிலுள் ளமரண வீடொன்றுக்கு சென்று வந்த பின்னர், காய்ச்சல் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த 25, 26, 27, 30 ஆகிய திகதிகளில் பாடசாலைக்கும் கடமைக்காக சென்றுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

இப்பாடசாலையின் 40 ஆசிரியைகள் தற்போது சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஆசிரியர்கள் உட்பட, அதிபர், மாணவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இப்பாடசாலை ஒருவார காலத்துக்கு மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தொற்றுக்குள்ளான ஆசிரியர், சென்ற மரக்கறி கடையொன்றும் மூடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X