Kogilavani / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி மாவட்டத்தில், மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து, பெருமளவிலான மக்கள் வெளியேற மறுப்பதால், அவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்ற முடியாதுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு அபாயப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு, மக்களுக்கு பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளப் போதிலும் பல்வேறுக் காரணங்களைக் கூறி குறித்தப் பகுதிகளிலிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி மக்களுக்கு, மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளப் போதிலும் மாற்றுக் காணிகளில் குடிபெயர்வதற்கே மறுப்புத் தெரிவித்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன்காரணமாக தமது கடமைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பாரிய உயிரனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்பாக, மக்கள் தாமாகவே முன்வந்து, பாதுகாப்பான இடங்களுக்குக் குடிப்பெயருமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026