R.Tharaniya / 2025 நவம்பர் 20 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை -லிந்துலை நாகசேன தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை (19) அன்று மாலை நாகசேன நகர வளாகத்தில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட தினசரி ஊதியம் ரூ.1,750 ஐ எதிர்க்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர்.
தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சியின் நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்தனர். போராட்டத்தின் போது, தொழிலாளர்கள் சில எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர்.
போராட்டக்காரர்கள் மேலும் வலியுறுத்தியையாவது தோட்டங்களில் உள்ள அரசியல்வாதிகள் இதுவரை தாங்களின் சம்பளத்தை அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டுமே தோட்டங்களுக்கு வருகிறார்கள், அவர்களின் குறைகளை கவனிக்கவே இல்லை. அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட ரூ.1,750 திட்டத்தை அனைத்து அரசியல்வாதிகளும் உடனடியாக ஆதரிக்க வேண்டும் என்று தோட்ட தொழிலாளர்கள் கோருகின்றனர்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 1,750 சம்பளம்.பெற்றுக் கொடுக்க அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.





எஸ் சதீஸ்
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago