Kogilavani / 2021 மார்ச் 05 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.கௌசி
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில், கடந்த மூன்று வாரங்களாக உரிமை கோராது வைக்கப்பட்டுள்ள சடலத்தை அடையாளம் காண உதவுமாறு லிந்துலை பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன் (வயது 74) என்ற பெயர் மற்றும் வயது விபரத்துடன், கடந்த ஜனவரி 4)ஆம் திகதி, கண்டி பெரியாஸ்பத்திரியில் குறித்த நபர் சுகவீனம் காரணமாக அனுமதியாகியுள்ளார் என்றும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதன் பின்னர், கண்டி வைத்தியசாலையிலிருந்து குறித்த நபரை (16) ஆம் திகதி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், வைத்தியசாலையின் ஆண்கள் பிரிவு விடுதியில் ஏற்பட்ட இடவசதி பற்றாக்குறை காரணமாக, லிந்துலை பிரதேச வைத்திசாலைக்கு இடமாற்றம் செயப்பட்டிருந்த நிலையில், கடந்த (4) ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபருக்கு உறவினர்கள் யாரும் இருந்ததாகவோ, சரியான முகவரி இருந்ததாகவோ தொடர்பான தகவல்கள் ஏதும் வைத்தியசாலையின் பதிவேட்டில் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலை நிர்வாகம், உயிரிழந்த நபரின் சடலத்தை மீண்டும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், சடலம் பிரதே அறையில் கடந்த ஒருமாத காலமாக உரிமை கோராது வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சடலத்தை ஆடையாளம் காண உதவுமாறு, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026