Janu / 2026 மார்ச் 25 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரில் உள்ள மருந்தகம் ஒன்றில், வைத்தியரின் பரிந்துரை சீட்டுகளின்றி இளைஞர்களுக்கு போதை குளிசைகளை விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரதீப் வீரசேகரவுக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. குறித்த மருந்தக உரிமையாளர், விசேட வைத்தியர்களின் பரிந்துரை சீட்டுகள் ஏதுமின்றி, இளைஞர்களை இலக்கு வைத்து அதிக விலைக்கு, போதை தரும் குளிசைகளை விற்பனை செய்து வருவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த தகவலை உறுதிப்படுத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர், பொலிஸ் உளவாளி ஒருவரை மருந்தகத்திற்கு அனுப்பி சோதனையிட்டனர். இதன்போது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,400 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், அவரே அந்த மருந்தகத்தின் உரிமையாளர் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

11 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
49 minute ago