எம். செல்வராஜா / 2018 டிசெம்பர் 24 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள் இருவர் ஆகியோரின் போலியான கையொப்பங்களைப் பயன்படுத்தி, போலி அரசாங்க இறப்பர் இலட்சினைகளுடன் ஆவணங்களைத் தயாரித்து, அரசாங்க வங்கியொன்றிலிருந்து 13 இலட்சம் ரூபாய் கடன் பெற்றுக்கொண்டு தலைமறைவாகியிருக்கும் ஆசிரியரை, வலைவீசித் தேடி வருவதாக, மொனராகலை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. ரட்ணசிறி, மொனராகலை விசேட குற்றத்தடுப்புப் புலனாய்வுப் பிரிவுக்குச் செய்த முறைப்பாட்டையடுத்தே, இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஆசிரியர், குறித்த அரசாங்க வங்கியில் கடன் பெற்றுக்கொள்வதற்கு, திஸ்ஸமஹாராமையிலுள்ள நுண்நிதிக்கடன் நிறுவன முகாமையாளர், பூரண உதவிளை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கியில் பெறப்பட்ட கடனுக்கான தவணைக் கட்டணங்கள் செலுத்தப்படாமையால், அவருக்கு வங்கியால் அனுப்பப்பட்ட கடிதங்கள் அனைத்தும், மீண்டும் வங்கிக்கே சென்றுள்ளன.
இதையடுத்து, இது தொடர்பாக, அரசாங்க வங்கி முகாமையாளர், வலயக் கல்விப் பணிப்பாளருக்கு, அவரசக் கடிதமொன்றை அனுப்பியதைடுத்து, போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டமை தொடர்பாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை, மொனராகலை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago