2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

பௌத்தக் கொடிகள் பறக்கவிடாததால் அதிருப்தி

Editorial   / 2020 மே 07 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்தர விராஜ் அபயசிறி

உலக மரபுரிமைத் தளமாக அறியப்பட்ட மாத்தளை அலுவிஹார பூஜை பூமியில், வெசாக் தினத்தைப் பிரதிபலிக்கும் எத்தகையச் ஏற்பாடுகளும் செய்யப்படாமைக்கு, அந்தப் பிரதேசத்தில் வாழும் பௌத்தர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.  

விசேடமாக பௌத்தக் கொடிகள் கூட, பறக்கவிடப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாத்தளை நகரில், ஆங்காங்கே பௌத்தக் கொடிகள் தனிப்பட்ட முறையில் பறக்கவிடப்பட்டிருந்தாலும் மாத்தளை நகரசபைக்கு உட்பட்ட உலக மரபுரிமை பூமியில் அதற்கான எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என்று, பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாத்தளை மாநகரசபையே, இதற்கான பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் எனினும் மாத்தளை மாநகர சபை அதை செய்வதற்குத் தவறிவிட்டதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் கருத்துரைத்த மாநகர சபையின் தலைவர் டல்ஜின் அலுவிஹார, மாநகரசபையின் நிர்வாகத்தில் உள்ள பலவீனங்களால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நகரசபையின் தலைவர் என்ற வகையில் தான் பொறுப்புடன் செயற்பட்டாலும் ஏனைய உறுப்பினர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட வேண்டும் என்றும் ஒத்துழைப்பு இன்மையே, இந்நிலைமைக்குக் காரணம் என்றும் தெரிவித்தார்.

உலக மரபுரிமை தளத்தல், வெசாக் அலங்கரிப்புகள் செய்யப்படாமைக்கு தானும் கவலைக் கொண்டதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .