Sudharshini / 2016 ஜூன் 29 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன், பொகவந்தலாவை பிரதான வீதியின் அலுகால பகுதியில் இன்று(29) இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டனிலிருந்து நோர்வூட் சென்ற முச்சக்கரவண்டியும் நோர்வூட் பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்குச் சென்ற முச்சக்கரவண்டியுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இரு முச்சக்கரவண்டிகளின் சாரதிகளும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு முச்சக்கர வண்டிகளும் அதி வேகமாக சென்றமையே விபத்து இடம்பெற காரணம் என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.


2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026