Yuganthini / 2017 மே 11 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
1.jpg)
-சுஜிதா
லிந்துலை- என்போல்ட் தோட்டத்தில், வீட்டுக்கு செல்லும் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று, இனதெரியாத நபர்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட சம்பவமொன்று, இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியின் உரிமையாளர், மெராயா நகரத்திலிருந்து புதன் கிழமை (10) இரவு 11 மணியளவில் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அவர், தனது முச்சக்கர வண்டியை, வீதியோரம் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று அதிகாலை வேளையில், பாரிய வெடிப்புச் சத்தமொன்று கேட்டதை அடுத்து விழித்துக்கொண்ட உரிமையாளர் உட்பட அப்பகுதி மக்கள், வீதிக்கு வந்துப் பார்த்த போது, குறித்த முச்சக்கரவண்டி, எரிந்துகொண்டு இருந்துள்ளதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில், முச்சக்கரவண்டியின் உரிமையாளரால், லிந்துலை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026