2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

மோடிக்காக குளவிக் கூடுகள் அகற்றல்

Gavitha   / 2017 மே 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்துக்கான விஜயத்தை மேற்கொள்வதையொட்டி, முக்கியமான மைதானங்களுக்கு அருகிலுள்ள குளவிக் கூடுகளை அகற்றும் நடவடிக்கைகள், நேற்று (8)முன்னெடுக்கப்பட்டன.

ஹட்டன்-டன்பார், தரவளை மற்றும் நோர்வூட் ஆகிய மைதானங்களுக்கு அருகில், பாரிய மரங்களில் கட்டப்பட்டிருக்கும் குளவி கூடுகளே, அகற்றப்படுகின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பயணிக்கும் ஹெலிகள், மேற்குறிப்பிட்ட மைதானங்களிலேயே தரையிறப்படவுள்ளன. 

அந்த மைதானங்களுக்கு அருகில், கட்டப்பட்டிருக்கும் குளவி கூடுகள், ஹெலிகொப்டர்கள் உள்ள விசிறிகளிலிருந்து வெளியாகும், காற்றின் வேகத்தில், கலைந்து, முக்கிய பிரமுகர்களை கொட்டலாம் அல்லது மிககுறுகிய நேர, நிகழ்ச்சி நிரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை காண்பித்தே, இந்த கூடுகள் அகற்றப்படுகின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .