Kogilavani / 2017 மே 08 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் சென்ற வாகனத்தை மறித்து, அமைச்சர் திகாம்பரம் இடையூறு விளைவித்ததாக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
எதிர்வரும் 12ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு, நோர்வூட் மைதானத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பில் பார்வையிடச்சென்று திரும்பிச் செல்கையில்,நேற்று (7) மாலை, நோர்வூட் பகுதியில் எதிரே வந்த அமைச்சர் திகாம்பரத்தின் வாகனத் தொடரணியினர், வாகனத்தை மறைத்து இடையூறு விளைவித்ததாக, செந்தில் தொண்டமான், ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
சம்பவத்தையடுத்து, ஆதரவாளர்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதால், நோர்வூட் நகரத்தில் பதற்றம் தோன்றியிருந்தது.
சம்பவம் தொடர்பில் அமைச்சர் திகாம்பரம் கருத்துத் தெரிவிக்கையில், "இந்தியப் பிரதமர் மோடியின் மலையக விஜயம் தொடர்பில், மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அமைச்சின் ஊடாகவே வரவேற்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்ற நிலையில், செந்தில் தொண்டமான் உள்ளிட்ட இ.தொ.காவினர், நோர்வூட் விளையாட்டு மைதானத்துக்கு வருகைதந்து, இடையூறு விளைவித்தனர்" என்று தெரிவித்தார்
எனினும், நோர்வூட் நகரத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ள நிலையில், பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் விசாரணையை, பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.



30 minute ago
50 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
50 minute ago
8 hours ago