Kogilavani / 2016 ஜனவரி 03 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாலித ஆரியவன்ச
மூதாட்டியை ஏமாற்றிப் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 35 வயதுடைய பெண்ணைப் பதுளைப் பொலிஸார், சனிக்கிழமை(02) கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹாலிஎல நகரிலுள்ள அரச வங்கியொன்றுக்கு பணத்தை பெறுவதற்காக வந்த 76 வயதுடைய மூதாட்டி, தனக்குப் பார்வை குறைபாடு என்றும் வங்கி விண்ணப்பத்தை நிரப்பித்தருமாறும் 35 வயதான பெண்ணிடம் கேட்டுள்ளார்.
அப்பெண்ணும் உதவிசெய்வதைப் போன்று பாசாங்கு செய்து, மூதாட்டியிடமிருந்து வங்கிப் புத்தகம், அடையாள அட்டை, பணத்தை மீளப் பெறும் பற்றுச்சீட்டு என்பவற்றை பெற்றுக்கொண்டுள்ளதுடன் பதுளை நகரிலுள்ள வங்கிக்குச் சென்று, தனது பாட்டி சுகவீனமடைந்ததால் தான் பணத்தை பெறுவதற்கு வந்ததாகக் கூறி 35,000 ரூபாய் பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி, இவ்விடயம் தொடர்பில்
ஹாலி-எலவிலுள்ள வங்கியின் முகாமையாளரிடமும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண், சனிக்கிழமை(02) மீண்டும் பணத்தைப் பெறுவதற்காக ஹாலி-எல வங்கிக்கு வந்தபோது வங்கியின் முகாமையாளரின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago