Sudharshini / 2016 மார்ச் 16 , மு.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில், இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற 65 வயதான வயோதிபப் பெண் ஒருவர், அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை (14) இரவு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் மேற்படி பகுதியைச் சேர்ந்த நபரொருவரை, தலவாக்கலை பொலிஸாரால் நேற்று (16) அதிகாலை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 24ஆம் திகதி மாலை, கிறேட்வெஸ்டன், லூசா தோட்டத்தில் இரு குழுக்கள் மது அருந்திவிட்டு வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர். வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில், கைலப்பில் ஈடுபட்டிருந்த நபரொருவருடைய தாயாரான மேற்படி மூதாட்டி, அதனைத் தடுக்க முற்பட்டுள்ளார். இதில் அவரின்; கையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு மோதலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு இடையே சிக்குண்டு தாக்குதலுக்கும் இலக்காகியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த மூதாட்டி, தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்த பின், லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். லிந்துலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பெற்று இரு தினங்களில்; வீடு திரும்பிய அவர், பின்னர் வயிற்று வலி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே கடந்த 14ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரின் மரண விசாரணை 15.03.2016 அன்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர்.குடாகமவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த மூதாட்டியின் வயிற்றின் குடல் பகுதி வெடித்து காணப்பட்டதை உணர்ந்த மரண விசாரணை அதிகாரி, இது கொலையாக இருக்கலாம் என தலவாக்கலை பொலிஸாரிடம் சந்தேகம் வெளியிட்டார். இந்நிலையிலேயே, தாக்குதலில் ஈடுப்பட்ட பிரிதொரு நபரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபர், இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். உயிரிழந்த மூதாட்டியின் வயிற்றில் உதைத்ததாக, உயிரிழப்பதற்கு முன்னர் அந்த மூதாட்டி செய்த பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தலவாக்கலை குற்றதடுப்புப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago