2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக ஹட்டன்-காலி வரை போராட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதலாளிமார் சம்மேளனத்தின் எதேச்சதிகரமான போக்கைக் கண்டிக்கும் வகையில், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமானது, நாடுதழுவிய ரீதியிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது.   

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சேவை விதிமுறைகள் மற்றும் புதிய கூட்டொப்பந்தம் போன்ற நடைமுறைகளுக்கு எதிராகவே, இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  

ஹட்டனில் தனது போராட்டத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள மேற்படிச் சங்கம், எதிர்வரும் 25 ஆம் திகதி, காலியில் போராட்டத்தை நிறைவுசெய்யவுள்ளது.  

இதற்கமைவாக, கண்டி, பதுளை, இரத்தினபுரி ஆகிய நகரங்களில் எதிர்வரும் 19 ஆம் திகதியும், 22 ஆம் திகதி தெனியாயவிலும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .