2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

மாபெரும் சிரமதானப் பணி

Kogilavani   / 2017 மே 14 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்திக் மற்றம் பொலித்தீன் கழிவுகளை அகற்றும் சிரமதானப் பணி, இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனசமூக சங்கங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 5 குழுக்கள் சிரமதான பணியில் ஈடுபட்டதாக, அம்பகமுவ பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சரவணன் தெரிவித்தார்.

கித்துல்கலையிலிருந்து ஹட்டன் வரையிலான 30 கிலோ மீற்றர் வரை கழிவுகள் அகற்றப்பட்டதுடன், சேகரிக்கப்பட்ட கழிவுகள், நல்லத்தண்ணி, ரிக்காடன் குப்பைக்குழிக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக, அவர் மேலும் கூறினார்.

சிவனொளிபாதமலை மற்றும் நுவரெலியா வசந்த காலத்துக்கு வருகைத்ததந்த  பலர், வீதியோரங்களில் குப்பைகளை வீசிச் சென்றுள்ளதால், சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .